fbpx

பிரபல ஊடக நிறுவனம் மீது சிபிஐயும் வழக்குப்பதிவு..!! சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!!

அமெரிக்க கோடீஸ்வர் நெவிலி ராய் சிங்கம் என்பவருக்கு சீன அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊடகங்களுடன் தொடர்பு உள்ளது என்றும், நியூஸ் கிளிக் நிறுவனம் உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு நிதியளிக்கிறார் என்றும் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால், இதற்கு நியூஸ் கிளிக் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, அந்நிறுவனம் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், 2 குழுக்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தியது, குற்ற சதி என பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. சீனா தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து நியூஸ் கிளிக் நிறுவனம் ரூ.38 கோடி பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

அதனடிப்படையில், அமலாக்கத்துறை இயக்குனரகம் கடந்த 3ஆம் தேதி நியூஸ் கிளிக் அலுவலகத்திலும், அந்நிறுவனத்துடன் தொடர்புடையவர்களின் 30 இடங்களிலும் சோதனை நடத்தியது. நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அதன் நிர்வாக அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நியூஸ் கிளிக் நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதன் நிறுவனர் பிரபீர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நியூஸ் கிளிக் நிறுவனம் மீது வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் சிபிஐ அதிகாரிகளும் தற்போது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Chella

Next Post

உலகின் மிகப்பெரிய 2-வது இந்து கோயில்..!! எங்கு இருக்கு தெரியுமா..? என்னது அமெரிக்காவுலயா..?

Thu Oct 12 , 2023
அமெரிக்கா நியூஜெர்சில் 183 ஏக்கர் பரப்பளவில், டெல்லியில் இருப்பதை போன்ற மிகப்பெரிய பிரமாண்டமான பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் திறக்கப்பட்டு உள்ளது. அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும். கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலின் பரப்பளவுக்கு அடுத்தப்படியாக உள்ளதால், இக்கோவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய இந்து கோவில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கடந்த 2011இல் துவங்கப்பட்ட இக்கோவிலின் கட்டுமானப் பணியானது, தற்போது வரை அமெரிக்கா முழுவதிலும் இருந்து […]

You May Like