fbpx

சிறுவர்களின் போர்ன் வீடியோக்களை பதிவேற்றுபவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை …

சிறுமிகளின் ஆபாச படங்கள், போர்ன் வீடியோக்களை டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தலங்களில் பதிவிட்டவர்களை பிடிக்க 20 மாநிலங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் 18 வயதிற்குள்பட்ட சிறுமிகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. குழந்தைகள் எனவும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுக்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. சிறுமிகளுக்கு எதிராக சமூக வலைத்தலங்களில் வீடியோக்கள் பதிவிடுவது, போலியான அக்கவுண்டை பயன்படுத்தி அதில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றுவது என்பது அதிகரித்து வருகின்றது.

சிறுமிகளின் போர்ன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை பெறும் வகையில் சட்டம் உள்ளது. இருந்தாலும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இணையதளத்தில் ஆபாச வீடியோக்கள் இது போன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 18 வயதிற்குள்பட்ட சிறுவர்களின் வீடியோக்களை பணத்திற்காக விற்கப்படுகின்றது. இது போன்ற குற்றச்செயல்கள் குறித்து சமீபத்தில் டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து புகார் அளித்தது. இதையடுத்து தற்போது 20 மாநிலங்களில் ரெய்டு தொடங்கியுள்ளது.கடந்த ஆண்டு இதே போல ரெய்டு நடத்தப்பட்டது. இதற்கு ஆபரேஷன் கார்பன் என பெயரிடப்பட்டது. இந்த ஆண்டு இந்த விவகாரத்தில் மிகவும் தீவிரமாக சி.பி.ஐ களம் இறங்கியுள்ளது. இதற்கு ’’ஆபரேஷன் மெகா சக்ரா’’ என பெயரிடப்பட்டுள்ளது.  

ஆபாச வீடியோக்கள் பதிவிடுபவர்கள், அதை பார்ப்பவர்கள், பகிர்பவர்கள் என அனைவரையும் இந்த ஆபரேஷன் கார்பன் மூலம் கைது செய்யப்படுவார்கள்.

Next Post

பி.எப்.ஐ. சதி திட்டங்கள்… தேசிய புலனாய்வுக்குழு நீதிமன்றத்தில் தகவல்…

Sat Sep 24 , 2022
தீவிரவாத நடவடிக்கைகளால் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சதி திட்டம் தீட்டியுள்ளதாக தேசிய புலனாய்வுக்குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழகம் , கேரளா உள்ளிட்ட பல்வேற மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 93 இடங்களில் சோதனை நடத்தியதில் 106 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இதனிடையே கேரளாவின்கொச்சியில் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுக்குழு […]

You May Like