சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பழைய முறைப்படி பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா சூழல் காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், உயர்கல்வியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கியது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேரடி முறையில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டது. அந்தவகையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு செமஸ்டர் முறை போல இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல் தேர்வில் மாணவர்களின் பாட சுமையை குறைக்கும் விதமாக 50 சதவீதம் பாடங்களில் இருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டன.
![சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு..!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/04/Tamil_Nadu-Class_10-Class_12-exam-hostel.jpg)
இதற்கிடையே, நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால், நடப்பு கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பழைய முறைப்படி வருகின்ற 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வின் மாதிரி வினாத்தாள் மற்றும் மதிப்பெண் கணக்கீடு முறை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் https://www.cbse.gov.in/ என்ற அதிகாரப்பூர்வை இணையதள பக்கத்தை பார்வையிடவும்.