fbpx

சாதனை‌..! ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்த மாணவி CBSE 10-ம் வகுப்பு தேர்வில் 95.02 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம்…!

ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்த மாணவி சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 95.02 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். காஃபி (Kafi) என்ற அந்த பெண் தனது 3 வயதில் , பொறாமையின் காரணமாக அக்கம்பக்கத்தினர் அவளை ஆசிட் வீசி தாக்கினர், அதன் பிறகு அவள் முகம் முழுவதும் எரிந்து 6 ஆண்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இதனால் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது.

அப்போதிருந்து, அவர் பிரெய்லி ஸ்கிரிப்ட் மூலம் படித்து வருகிறார், மேலும் அவர் வாசிப்பதில் அதிக ஆர்வம் உடையவர், அதன் விளைவாக 10 ஆம் வகுப்பில் அவள் 95.02 சதவீத மதிப்பெண் எடுத்து அனைத்து பெண்களுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்துள்ளார்.15 வயதான காஃபியின் தந்தை செயலகத்தில் பியூனாக பணிபுரிகிறார். தான் ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புவதாகவும், பெற்றோரை பெருமைப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Vignesh

Next Post

முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...! ஓ.பி.எஸ் வலியுறுத்தல்...!

Mon May 15 , 2023
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மருத்துவ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ நடத்திய தேர்வில்‌ முறையாக தேர்ச்சி பெற்று 13,000 செவிலியர்கள்‌ அரசு மருத்துவமனைகளில்‌ செவிலியர்களாக பணியாற்றி வருகிறார்கள்‌. இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையில்‌, முதல்‌ இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில்‌ பணியாற்ற வேண்டும்‌ என்றும்‌பின்னர்‌ அவர்களின்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படும்‌ என்றும்‌ குறிப்பிடப்பட்டுள்ளதாக செவிலியர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌. ஆனால்‌ எட்டு ஆண்டுகளுக்கு மேல்‌ பணியாற்றியும்‌ மேற்படி 13,000 செவிலியர்களில்‌ […]
ஓபிஎஸ்-க்கு பாஜகவும் தேவை, திமுகவும் தேவை..! அதிமுக எம்எல்ஏ-க்கள் காட்டம்..!

You May Like