fbpx

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்.. சென்னைக்கு எந்த இடம்..?

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது..

2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று இடை நிலை கல்வி வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. நாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதினர். அதில் 10 ஆம் வகுப்பு தேர்வினை 21 லட்சம் பேரும், 12 ஆம் வகுப்பு தேர்வினை 14 லட்சம் பேரும் எழுதினர்.

எனினும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வந்தது.. பல்வேறு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியதால், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வரும் வரை பல்கலைக்கழகங்கள் காத்திருக்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சிபிஎஸ்இ வாரியம் கடிதம் எழுதி இருந்தது..

இந்நிலையில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவுகள் இன்று வெளியானது.. மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் digilocker.gov.in  என்னும் இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் , ரோல் எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளில் எஸ்எம்எஸ் மூலம் தங்கள் முடிவுகளை பெறலாம்..

இதில் 92.71% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. 98.82% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.. 98.16% தேர்ச்சியுடன் பெங்களூரு 2-ம் இடத்திலும், 97.79% தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 7% குறைந்துள்ளது.. இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், கல்லூரி முதலமாண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இதனிடையே சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி.. கண்காணிப்பு தீவிரம்...

Fri Jul 22 , 2022
கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது பன்றிகளை பாதிக்கும் மிகவும் ஆபத்தான வைரஸ் நோயாகும். இந்த தொற்று முதன்முதலில் ஆப்பிரிக்காவில் 1920 இல் விலங்குகளில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பன்றிகளிடம் இருந்து இந்த வகை வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது என்று விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது.. எனினும் பாதிக்கப்பட்ட பன்றிகளுடம் […]

You May Like