fbpx

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இந்த தேதிக்குள் வெளியாகும்… புதிய தகவல்..

2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று இடை நிலை கல்வி வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. நாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதினர். அதில் 10 ஆம் வகுப்பு தேர்வினை 21 லட்சம் பேரும், 12 ஆம் வகுப்பு தேர்வினை 14 லட்சம் பேரும் எழுதினர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வந்தது.. எனினும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியதால், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வரும் வரை பல்கலைக்கழகங்கள் காத்திருக்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சிபிஎஸ்இ வாரியம் கடிதம் எழுதி இருந்தது..

இதனிடையே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்ற தகவல் வெளியானது.. எனவே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக்கொள்ள கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் அனுப்பி இருந்தது..

இந்நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.. மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் digilocker.gov.in  என்னும் இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் , ரோல் எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளில் எஸ்எம்எஸ் மூலம் தங்கள் முடிவுகளை பெறலாம்..

DigiLocker இணையதளத்தில் எப்படி முடிவுகளை தெரிந்து கொள்வது..?

  • DigiLocker வலைத்தளத்தைப் பார்வையிடவும் – http://www.digilocker.gov.in – அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் DigiLocker பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
  • படி 2: CBSE என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • படி 3: 10 ஆம் வகுப்பு முடிவுகளுக்கு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அல்லது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் தாளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • 12 ஆம் வகுப்பு முடிவுகளுக்கு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை (எது தேவையோ அது) தேர்ந்தெடுக்கவும்.
  • படி 4: CBSE பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைந்து உங்கள் மதிப்பெண் பட்டியலை அணுகவும்.
  • படி 5: மாற்றாக, உங்கள் ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.
  • படி 6: அதை பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக மதிப்பெண் பட்டியல் மற்றும் பிற சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

Maha

Next Post

1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.20,000 உதவித்தொகை...!

Wed Jul 20 , 2022
குழந்தைகளுக்கான பிஎம் கேர் திட்டம் 2021 மே 29 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. பயனாளிகளை கண்காணித்து, திட்டத்தை செயல்படுத்துவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், செயல்பாட்டு முகமையாக நியமிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளர் அல்லது தத்தெடுத்த பெற்றோர் ஆகியோரை இழந்த குழந்தைகள், தடையின்றி கல்வியை தொடர பின்வரும் நிதியுதவி திட்டங்கள் உள்ளன  சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால், 1 முதல் 12-ம் வகுப்பு […]
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை..!! இன்றே கடைசி நாள்..!! உடனே முந்துங்கள்..!!

You May Like