fbpx

CBSE School | ”இனி தேர்வில் புத்தகத்தை பார்த்தே எழுதலாம்”..!! சிபிஎஸ்இ கொண்டுவரும் புதிய நடைமுறை..!!

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், புத்தகங்கள், கையேடுகளை பார்த்து தேர்வு எழுதும் முறையை கொண்டுவர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பொதுத்தேர்வின்போது கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டு பதில் எழுதும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையின் மூலம் மனப்பாடம் செய்து, அதை அப்படியே ஒப்புவிக்கும் முறையே உள்ளதாகவும், மாணவர்கள் சிந்தித்துத் தேர்வு எழுதுவது இல்லை என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்தத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, 9 – 12ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள், புத்தகங்கள், கையேடுகளை பார்த்தே தேர்வு எழுதும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம், மனப்பாடம் செய்து அப்படியே எழுதும் நடைமுறைக்கு மாற்றாக சிந்தித்து விடை எழுதும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நினைவாற்றலை பரிசோதிப்பதற்கு பதிலாக பாடத்தை எந்த அளவுக்கு புரிந்துள்ளனர் என்பதை இந்த புதிய முறை தேர்வு மூலம் மதிப்பீடு செய்ய முடியும். புத்தகங்களை பார்த்து எழுத அனுமதிப்பதன் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும் என்று சிபிஎஸ்இ நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த புதிய முறைப்படி வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் மட்டும் சோதனை முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

Read More : Lok Sabha Election | நெல்லை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..? மீண்டும் தட்டிப் பறிக்குமா திமுக..?

Chella

Next Post

சைவ உணவு பிரியர்களுக்கான தாவர பால்.? இதில் உள்ள நன்மைகள் என்ன.!?

Thu Feb 22 , 2024
பொதுவாக நம்மில் பலரும் அசைவ உணவு மற்றும் சைவ உணவு என பிடித்தமான உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். ஒரு சிலருக்கு அசைவம் பிடிக்காது. ஒரு சிலருக்கு சைவம் பிடிக்காது. அந்த வகையில் அசைவம் சாப்பிட விரும்பாமல் சைவ உணவை மட்டும் சாப்பிடும் சைவ பிரியர்களுக்கான பால் தான் இந்த தாவர பால். இந்த பால் சோயா, பாதாம், தேங்காய், ஓட்ஸ், முந்திரி போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த உணவு பொருட்களை […]

You May Like