fbpx

சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்!… தமிழக பாடத்திட்டத்தில் இருந்து வெளியேறியது புதுச்சேரி!

வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து புதுச்சேரி வெளியேறியது.

வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால், தமிழ் பாடத்திட்டத்தில் இருந்து புதுச்சேரி வெளியேறியது. இதனால் கட்டாய பாடமாக இருந்த தமிழ், இனி விருப்ப பாடமாக தேர்வு செய்யும் முறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.புதுச்சேரியில் இதுவரை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக பாடத் திட்டத்தின் படி பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், தற்போது புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்கள் தங்களது விருப்ப மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் மொழியை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்கலாம், ஏனாமில் தெலுங்கு, மாஹேயில் மலையாள மொழியை விருப்ப பாடமாக 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

பல்வலியை போக்கும் கொய்யா இலைகள்!... டிரை பண்ணி பாருங்க!

Tue May 30 , 2023
பல் வலிக்கு கொய்யா இலை சிறந்த நிவாரணம் தரும். கொய்யா இலையில் டாக்டர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது பல் வலியை நீக்க உதவுகிறது. இதனை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் அந்த நீரினால் வாய் கொப்பளிக்கலாம். பொதுவாக பல் வலியை தாங்கிக்கொள்வது சற்று கடினமாக தான் இருக்கும். ஏனெனில் பல்வலி உடன் கண், காது மற்றும் தலைவலியும் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு பல் வலி அடிக்கடி ஏற்படுவது […]

You May Like