fbpx

அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயம்.. யுஜிசி அதிரடி உத்தரவு…

ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராவை பொருத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது..

நடப்பு கல்வியாண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் “ ராகிங்கை தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ரேகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.. முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியை பொருத்த வேண்டும்.. விடுதிகள், கழிப்பறைகள், உணவகங்களில் ரேகிங் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்ட வேண்டும்..

கல்லூரி நிர்வாகம் தரப்பு திடீர் ஆய்வு மேற்கொண்டு ரேகிங் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.. ராகிங்கில் ஈடுபட மாட்டேன்’ என www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.. மாணவர்களும், பெற்றோர்களும் இணையத்தில் பதிவு செய்ததை உறுதி செய்ய வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

’நானே வருவேன்’ அப்டேட்..! ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ்..! வெளியான முக்கிய தகவல்

Mon Sep 19 , 2022
நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு […]
தனுஷின் ‘நானே வருவேன்’ ரிலீஸ் தேதி வெளியானது..! தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

You May Like