ஷ்ரத்தா வாக்கரின் ‘கொலையாளி’ அஃப்தாப் பூனவாலாவின் வெட்டி எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியை கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, நகரின் வெவ்வேறு இடங்களில் அப்புறப்படுத்திய நபரை டெல்லி காவல் துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர். மேலும் அந்நபரிடம் மீதமுள்ள பாகங்களை வீசிய இடங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட அஃப்தாப் அமீனிற்கும் அவரது காதலி ஷ்ரதாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதில் அஃப்தாப், ஷ்ரதாவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் ஷ்ரதாவின் உடலை 35 கூறுகளாக வெட்டி, டெல்லியில் வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. முன்னதாக நவம்பர் 7அன்று ஷ்ரதாவின் பெற்றோர் மெஹ்ராலி காவல் நிலையத்தில் அவர்களது மகளைக் காணவில்லை என அளித்த புகாரையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து அஃப்தாப் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, மே 18 அன்று திருமணம் தொடர்பாக அஃப்தாப் அவரது காதலியுடன் சண்டையிட்டதாகவும், வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் ஷ்ரதாவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை பெண்ணின் 18 பாகங்கள் எழும்பு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

அதேபோல மாணவன் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் கூர்மையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. காதலன் பெண்ணின் உடலை வெட்டி அப்புறப்படுத்த செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.