fbpx

நாளை மறுதினம் போர் நிறுத்த பேச்சுவார்த்தை!. கண்டிஷன் போட்ட ரஷ்ய அதிபர் புடின்!

Putin: உக்ரைனுடனான போர் நிறுத்த ஒப்பந்தம், அமைதிக்கான இறுதி தீர்வை நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சு, வாக்குவாதத்தில் முடிந்தது. இதற்கு மத்தியில் அமெரிக்கா, உக்ரைன் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இருப்பினும், உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியது. தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என, டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் உடன் குறுகியகால தற்காலிக போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகவும், அதற்கான பேச்சுக்கு தயார் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அந்த போர் நிறுத்த ஒப்பந்தம், அமைதிக்கான இறுதி தீர்வை நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும் என்றும் புடின் நிபந்தனை விதித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ‘இறுதி போர் நிறுத்த ஒப்பந்த விதிகளில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும்; அமைதி பணிகளில் எந்தெந்த நாடுகள் பங்கு வகிக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்றும் புடின் நிபந்தனை விதித்துள்ளார்.

Readmore: ஷாக்கிங் ரிப்போர்ட்..!! குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு ‘கொழுப்பு கல்லீரல்’ நோய்..!! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..?

English Summary

Ceasefire talks to begin the day after tomorrow! Russian President Putin sets conditions!

Kokila

Next Post

வரும் 10-ம் தேதி அன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்...! தமிழக அரசு உத்தரவு

Sun Mar 9 , 2025
Additional tokens in deed registration offices on the 10th...! Tamil Nadu government orders

You May Like