fbpx

புத்தாண்டை வரவேற்று நண்பர்களுடன் பார்ட்டி..!! முதல் முறையாக மது குடித்த இளைஞர் மூச்சுத்திணறி பலி..!!

புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த சேலத்தை சேர்ந்த நபர் மது அருந்தி கொண்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்ட்டம் மல்லூர் அருகே வேங்காம்பட்டியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகன் சந்தோஷ் (வயது 23). இவர், இந்த ஆண்டு புத்தாண்டை சிறப்பாக கொண்டாட திட்டுமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தனது நண்பர்கள் 9 பேருடன் அவர் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுவதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் விடுதியிலேயே புத்தாண்டை கொண்டாட முடிவு செய்தனர். நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்று கொண்டாட வேண்டும் என்றும் அதற்காக மது பாட்டில்கள் மற்றும் அசைவ உணவுகளை தங்கியிருந்த தனியார் விடுதியில் வாங்கி வைத்துள்ளனர். புத்தாண்டு பிறந்தததும் நள்ளிரவில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாட தொடங்கிய இளைஞர்கள் தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். சந்தோஷும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அசைவ உணவுகளையும் சாப்பிட்டுக்கொண்டே மதுவை அருந்தியுள்ளனர்.

புத்தாண்டை வரவேற்று நண்பர்களுடன் பார்ட்டி..!! முதல் முறையாக மது குடித்த இளைஞர் மூச்சுத்திணறி பலி..!!

ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடிக் கொண்டு இருந்த போது சந்தோஷிற்கு திடீரென மூச்சுத்திண்றல் எற்பட்டுள்ளது. அப்போது, சந்தோஷ் மயங்கி விழுந்து இருக்கிறார். இதைப்பார்த்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த நண்பர்கள் பதறி போகினர். உடனடியாக ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சந்தோஷை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டை வரவேற்று நண்பர்களுடன் பார்ட்டி..!! முதல் முறையாக மது குடித்த இளைஞர் மூச்சுத்திணறி பலி..!!

முதற்கட்ட விசாரணையில், சந்தோஷ் முதல் முறையாக மது குடித்ததாகவும் இதனால், உடல் ஒத்துழைக்காமல் ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. உயிரிழந்த சந்தோஷூக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. புத்தாண்டு தினத்தை கொண்டாட சென்ற இடத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் பலியானது அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மது குடித்துவிட்டு ஆட்டம் போடுவதும், வாகனத்தில் அதிவேகமாக செல்வதும் போன்ற செயல்களில் சில இளைஞர்கள் ஈடுபடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஜாலி என்ற பெயரில் இளைஞர்கள் சிலர் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது ஒரு சில நேரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீர்குலைத்து விடுவது போல் அமைந்துவிடுகிறது.

Chella

Next Post

அதிர்ச்சி..! ரயில்களில் இனி ஸ்லீப்பர் கோச் கிடையாது...! டிக்கெட்டை நிறுத்தம் செய்யப் போவதாக தகவல்...!

Mon Jan 2 , 2023
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பகல் நேர பயணத்திற்கான ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் நிறுத்தம் செய்யப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் பயணிக்கும் பகல்நேர ஸ்லீப்பர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மீதான புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும். இருப்பினும், திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கும் பகல் நேர ரயில்களின் முன்பதிவு நீக்கப்பட்ட பெட்டிகளுக்கு ஸ்லீப்பர் டிக்கெட் வழங்கப்படும். கேரளாவில் இருந்து […]

You May Like