fbpx

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.26.75 கோடி சம்பளம் வாங்கும் பிரபலம்..!! விராட் கோலி எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா..?

இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக உள்ள விராட் கோலி, இந்தாண்டு வழக்கமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், அவர் புகைப்படம் மற்றும் வீடியோ பிளாக்கிங் தளமான இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியராக இருக்கிறார். விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுக்கும் ரூ.14 கோடி பெறுகிறார்.

இதையடுத்து கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த பட்டியலில் முதலிடத்திலும், அவரது பரம எதிரியான லியோனல் மெஸ்ஸி 2-வது இடத்திலும் இடத்திலும் உள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரொனால்டோ 3.23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 26.75 கோடி ரூபாயை கட்டணமாக பெறுகிறார். மறுபுறம், மெஸ்ஸி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 2.56 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 21.49 கோடி ரூபாய் கட்டணமாக பெறுகிறார்.

இந்நிலையில், உலக அளவில் டாப் 20 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இந்த பட்டியலில் மற்றொரு இந்தியரான பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 29-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ.4.40 கோடி கட்டணமாக பெறுகிறார்.

Chella

Next Post

இனி ’இந்திய தண்டனைச் சட்டம்’ கிடையாது..!! பெயர் மாற்றம்.. புதிய தண்டனைகள்.. புதிய விதிகள்..!! மக்களவையில் மசோதா தாக்கல்..!!

Fri Aug 11 , 2023
இந்திய தண்டனைச் சட்டம் என்பதை மாற்றி இனி பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூலம் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், சில முக்கிய விதிகள் மற்றும் தண்டனைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய […]

You May Like