fbpx

’செல்போன் + மின் மீட்டர்’..!! உடனே வரும் கட்டண விவரம்..!! இனி ரொம்ப ஈஸி..!! மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco), தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) என இரண்டு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வழக்கமாக, வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும். அந்தவகையில், உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். இதற்கிடையே, அனைத்து வீடுகளிலும் உள்ள மின் இணைப்புகளையும் ஸ்மார்ட் மீட்டராக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மின்சார வாரியம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் பயன்பாட்டு கணக்கை பயனர்களுக்கு உடனே தெரிவிக்கும் வகையில், செல்போன் ஆப்பை அறிந்தும் செய்துள்ளது. மின்வாரிய ஊழியர்கள் தங்களுடைய செல்போனோடு அரசு அளித்திருக்கும் கேபிளை சேர்த்து மீட்டருடன் இணைக்க வேண்டும்.

இதன் மூலமாக மின்கணக்கீடு செய்த பிறகு பயனர்களின் செல்போனுக்கு அவர்களது கட்டண விவரம் அனுப்பி வைக்கப்படும். இந்த முயற்சியானது முன்னதாக 44 மின் பகிர்மான வட்டங்களிலும், தலா 5 பிரிவு அலுவலகங்களிலும் சோதனை முறையில் செய்து பார்க்கப்பட்டது. இதில் விவரங்கள் துல்லியமாக பதிவாகியது உறுதி செய்யப்பட்டது. இம்மாத இறுதியில் இருந்து அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் செல்போன் செயலில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மின்வாரிய அறிவுறுத்தியுள்ளது.

Chella

Next Post

’மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க’..!! காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..!! விடுமுறையில் மாற்றமா..?

Thu Aug 31 , 2023
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை கடந்த ஏப்.28ஆம் தேதி வெளியிட்டது. […]

You May Like