fbpx

’பட்டாசு விற்பனை கடைகளில் செல்போன் பயன்படுத்த தடை’..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி இல்லாத தடை செய்யப்பட்ட நாட்டு வெடி மற்றும் சீன வெடிகளை விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், பட்டாசு உரிமம் பெற்ற விற்பனையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிபொருள்கள் தயாரிப்பு மற்றும் பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருள்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறை படுத்த வேண்டும்.

வெடிபொருள் தயாரிக்கும் உரிம தளங்களை அரசு அலுவலர்கள் தணிக்கை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு தயாரிக்கும் இடங்களில் அனுமதித்த அளவு மட்டுமே வெளிபொருட்களை தயாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர வேறு இடங்களில் தயாரிப்பு மற்றும் சேமிப்பு உள்ளிட்ட பணிகளை எக்காரணத்தை கொண்டு மேற்கொள்ளக்கூடாது. அதேபோல், எரிபொருள் தயாரிப்பு மற்றும் பட்டாசு விற்பனை செய்யும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என இக்கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ராக் ஸ்டார் அனிருத்தின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..? சம்பளமே இவ்வளவு வாங்குறாரா..?

Mon Oct 16 , 2023
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்த இளம் இசையமைப்பாளர் தான் அனிருத். 2011ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய இவர், முதல் பாடலிலேயே உலகளவில் பேமஸ் ஆனார். முதல் படத்திலேயே பெரிய அளவில் வளர்ந்த இவர், அடுத்ததாக விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்திற்காக அவர் இசையமைத்த தீம் மியூசிக் இன்றைக்கும் பலரது ரிங்டோனாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி […]

You May Like