வீடு கட்டுவது என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு வாழ்க்கைக் கனவு. ஆனால், நிலம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழிலாளர் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், அந்த கனவை நனவாக்கும் முயற்சி என்பது இன்னும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, தனிப்பட்ட முறையில் வீடு கட்டும் நபர்கள் (Individual House Builders – IHBs) மிகுந்த அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர்.
சிமெண்ட் விலை மீண்டும் உயரவுள்ளதா? நாட்டில் கடந்த சில மாதங்களாக சிமெண்ட் விலை மேலோங்கி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து இதுவரை, பெரும்பாலான மாநிலங்களில் சிமெண்ட் விலை கணிசமான உயர்வை கண்டுள்ளது. இந்த விலை உயர்வு வீடு கட்ட நினைக்கும் மக்களிடம் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
நடப்பு ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சில இடங்களில் விலை சற்று உயர்ந்திருந்தாலும், கிழக்கு மாநிலங்களில் கடந்த மாதம் சிமெண்ட் விலை ரூ.5 முதல் ரூ.7 வரை குறைந்தது. இந்நிலையில், அரசாங்க செலவினம் அதிகரிக்கும் போது சிமென்ட் துறையில் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக ஏப்ரல் 2025 இல் பிராந்தியங்கள் முழுவதும் மூட்டைக்கு ரூ.20 உயர வாய்ப்புள்ளதாக நுவாமா நிறுவனம் கணித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், முன்கூட்டியே திட்டமிடலும் கொண்ட நபர்கள் மட்டும் தான் செலவுகளை கட்டுக்குள் வைத்துக்கொண்டு, வீடு கட்டும் கனவை முடிப்பதில் வெற்றி பெற முடியும். பணத்திற்கும் கனவிற்கும் இடையே பாலமாக இருப்பது திட்டமிடல்தான்.