fbpx

JOBS| 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு.! ரூ.15,000/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

JOBS: 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா(Central Bank of India) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அட்டெண்டர் மற்றும் கவுன்சிலர் FLCC ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த வங்கி அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி அட்டெண்டர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். கவுன்சிலர் FLCC பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 65 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்டெண்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கவுன்சிலர் FLCC பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அட்டெண்டர் வேலை வாய்ப்பிற்கு ரூ.8,000/- ஊதியமாக வழங்கப்படும் மேலும் கவுன்சிலர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.15,000/- ஊதியமாக வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக பிராந்திய தலைவர்,
பிராந்திய அலுவலகம், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, AD டவர், முதல் தளம்,
கோரக்பூர், உத்திர பிரதேசம்- 273001 என்ற முகவரிக்கு 13.03.2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய https://www.centralbankofindia.co.in/en/recruitments என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

English Summary: Central Bank of India offers jobs for 8th grade passed outs and graduates with good salary.

Read More: OPINION POLLS| “சொல்லி அடிக்கும் மோடி” மீண்டும் பாஜக ஆட்சி… வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.!

Next Post

எப்பேர்ப்பட்ட வலியும் ஒரே நாளில் மேஜிக் போல் குணமாகும் இதை மட்டும் பண்ணுங்க போதும்.!?

Wed Feb 28 , 2024
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் 30 வயதை கூட தாண்டாமல் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் சாதாரண பாதிப்பிலிருந்து பல உயிருக்கே ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் தற்போதுள்ள இளைய தலைமுறை பலருக்கும் எலும்பு மிகவும் பலவீனமாக இருப்பதால் அடிக்கடி கை, கால், மூட்டு வலி ஏற்படுகின்றது. இவ்வாறு கால்சியம் குறைபாட்டால் எலும்புகளில் வலி ஏற்படுவதை உணவு முறைகளின் மூலமே சரி […]

You May Like