மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தக்ஷின் பாரத் தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தக்ஷின் பாரத் நிறுவனத்தில் லோயர் டிவிஷன் கிளர்க் சமையலர் மெசஞ்சர் தோட்டப் பணியாளர் ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இவையாவும் குரூப் சி பணிகள் ஆகும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அந்த அறிவிப்பின்படி லோயர் டிவிஷன் கிளர்க் பணிகளுக்கு +2 படித்திருக்க வேண்டும். சமையலர் பணிகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு சமையல் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மெசஞ்சர் பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கார்டனர் பணிகளுக்கும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். லோயர் டிவிஷன் கிளர்க் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் ரூ.19,900/- வழங்கப்படும் . சமையலர் பணிகளுக்கு ஊதியமாக ரூ.19,900/- வழங்கப்படும். மெசஞ்சர் பணிகளுக்கு ஊதியமாக ரூ.18,000/- வழங்கப்படும். கார்டனர் பணிகளுக்கு ஊதியமாக ரூ.18,000/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 21.04.2023 ஆகும் . இந்த வேலை வாய்ப்பிற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறனறிவு தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் சென்னையில் உள்ள ஐலண்ட் மைதானத்தில் வைத்து நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறவி விவரங்களை அறிய indianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.