fbpx

ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ் !  பண்டிகைக்கால போனஸ் பற்றிய தகவல்…

 ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கிவரும் போனஸ் தொகை இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது.

 இந்தியாவில் ரயில்வே நிர்வாகத்தில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு போனஸ் தொகை வழங்கப்படும். இந்த ஆண்டும் போனஸ் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் அரசு ஊழியர்களுக்கு 78 நாள் வேலைக்கான போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது. இதே போல் தகுதி உள்ள அரசிதழ் சான்றிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் தொகை வழங்கப்படுகின்றது என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே அவர்களின் மாத ஊதியம் 7000 இதன்படி 78 நாட்களுக்கு கணக்கிட்டு 17,951 ரூபாய் போனஸாக வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

 இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிட உள்ளனர். இது ரயில்வே ஊழியர்களின் செயல்திறனை மேலும் ஊக்குவிக்கும் என குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

விரைவில் சந்திப்பு..!! பொறுத்திருந்து பாருங்கள்..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

Wed Sep 28 , 2022
ஜெயலலிதாவுடன் பயணித்தவர்கள், அதிமுகவின் உண்மையான தொண்டர்களை விரைவில் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்த ஒரு மணி நேரத்திற்குள் அவரை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த சூழலில், சென்னை அசோக் நகரில் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். பின்னர், […]
விரைவில் சந்திப்பு..!! பொறுத்திருந்து பாருங்கள்..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

You May Like