fbpx

Army: ராணுவ வீரர்களின் சுகாதார பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்பந்தம்…!

ராணுவ மருத்துவ சேவைகள், மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கெளன்சிலுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சுகாதார ஆராய்ச்சி மற்றும் சேவைகள் துறையின் செயலாளரும், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பாகல், ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், ஆகியோர் கையெழுத்திட்டனர்.

உயிரி மருத்துவ ஆய்வு மற்றும் கல்வியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். பல்வேறு நிலப்பரப்புகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இது உதவும். ராணுவ வீரர்கள் மிக உயர்ந்த மலைப்பகுதிகளிலும் போர் தொடர்பான விபத்துகள், விபத்துக்கு பிந்தைய இழப்புகளிலும், தொற்றும் நோய்களிலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆ்யவு செய்ய, ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பும் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கெளன்சிலும் கரம் கோர்த்துள்ளன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு கூட்டான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர்- ஏசிஎஸ்ஐஆர் பிஹெச்டி திட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரிகள் ஆய்வுப்பட்டத்திற்கு பதிவு செய்யும் வாய்ப்பையும் இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.

Vignesh

Next Post

சால்மோனெல்லா மாசுபாடு…! அக்டோபர் 2023 முதல் 31% MDH மசாலா ஏற்றுமதிகளை அமெரிக்கா நிராகரிப்பு..! அறிக்கையில் வெளிவந்த உண்மை..!

Mon Apr 29 , 2024
இந்திய மசாலா தயாரிப்பாளர்களான எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் மசாலாக்கள், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் தடை செய்யப்பட்ட நிலையில், சால்மோனெல்லா மாசுபாட்டின் காரணமாக அமெரிக்காவிற்கு எம்.டி.ஹெச் பிரைவேட் லிமிடெட் ஏற்றுமதி செய்த மசாலா தொடர்பான ஏற்றுமதிகளுக்கான மறுப்பு விகிதங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில், அமெரிக்க சுங்க அதிகாரிகள் 31% MDH இன் மசாலா ஏற்றுமதிகளை நிராகரித்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய இரண்டும் MDH […]

You May Like