fbpx

Sugarcane 2024: கரும்பு கொள்முதல் விலை ரூ.315-ல் இருந்து ரூ.340 ஆக உயர்வு…! மத்திய அரசு ஒப்புதல்…!

Sugarcane 2024: கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 என உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்; கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 என உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.32 உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

மேலும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதை கருத்தில்கொண்டு 9.5 சதவீத சர்க்கரை கட்டுமானத்திற்கும் கீழே உள்ள கரும்புக்கு எந்தவித விலைக் குறைப்பும் செய்யக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.315.10 வழங்கப்படும். நடப்பு 2023-24 சர்க்கரைப் பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.315 வழங்கப்படுகிறது.

Sugarcane 2024: Central government approves increase in sugarcane procurement price from Rs.315 to Rs.340 per quintal

Vignesh

Next Post

Students Scholarship 2024: 9 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.4000 கல்வி உதவித்தொகை...!

Thu Feb 22 , 2024
Students Scholarship 2024: அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை. மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் […]

You May Like