fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு பண மழை கொட்ட போகுது..!! வெளியாகிறது 2 ஜாக்பாட் அறிவிப்புகள்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான இரண்டு முக்கியமான அறிவிப்புகளை மத்திய பாஜக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது. முக்கியமாக கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10இல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கே வேட்பாளர்களை அறிவித்து உள்ள காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை செய்து வருகிறது. இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அறிவிப்பு 1: ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி – ஜூன் மற்றும் ஜூலை – டிசம்பர் என்று இரண்டு கட்டங்களாக இந்த உயர்வு இருக்கும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 – 6 சதவிகிதம் உயர்த்தப்படும்.

சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு பணியாளர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ஆம் தேதி அகவிலைப்படி 4% வரை உயர்த்தப்பட்டது. அதுவரை 38% ஆக இருந்த நிலையில், 42% ஆக உயர்த்தப்பட்டது. அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு 2: தற்போது ஃபிட்மென்ட் காரணி 2.57 சதவிகிதமாக உள்ளது. இதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ளன. இது உயரும் பட்சத்தில் வருமானமும் உயரும். உதாரணமாக தற்போது 18 ஆயிரமாக அடிப்படை சம்பளம் கொண்டவர்கள் இந்த ஃபிட்மென்ட் காரணி காரணமாக 26 ஆயிரம் வரை பெறுவார்கள். இதுவே ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு செய்யப்பட்டு 3.68 சதவிகிதம் ஆக்கப்பட்டால் மற்ற சம்பள உயர்வுகள், சலுகை உயர்வுகளுடன் சேர்த்து அவர்களின் வருமானம் 63 ஆயிரம் வரை உயரும். ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு தொடர்பாக அறிவிப்பும் விரைவில் வரலாம் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

வெறும் ரூ.90-க்கு வாங்கிய வீடு..!! இப்போது ரூ.4 கோடியாம்..!! பக்கா பிளான் போட்டு அசத்திய பெண்..!!

Fri May 5 , 2023
இத்தாலி நாட்டில் வெறும் 90 ரூபாய்க்கு ஒரு பெண் வாங்கிய வீடு ஒன்று, இன்று 4 கோடி ரூபாயாம். 90 ரூபாய் வீடு 4 கோடி ரூபாய் என்கிற அளவில் மதிப்பு எப்படி உயர்ந்தது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். வாழ்க்கையில இரண்டு விஷயம் மிகவும் முக்கியமானது. ஒன்று கல்யாணம், மற்றொன்று வீடு. இரண்டுக்குத்தான் நம் மக்கள் அதிக பணத்தை செலவு செய்வார்கள். குறிப்பாக தங்களுக்கு என்று ஒரு சொந்த […]
வெறும் ரூ.90-க்கு வாங்கிய வீடு..!! இப்போது ரூ.4 கோடியாம்..!! பக்கா பிளான் போட்டு அசத்திய பெண்..!!

You May Like