fbpx

பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசு..!! பீகார், ஆந்திராவுக்கு தூக்கிக் கொடுக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள்..!!

நடப்பு 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் முதலில் பட்ஜெட் முன்னுரையை வாசித்தார். தொடக்கத்திலேயே 3ஆம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்ததோடு, அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், தமிழ்நாட்டு வளர்ச்சி திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை. இந்த பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு என்ற பெயரை கூட நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் – செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முதல்வர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையிலும், அதுபற்றிய எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அத்துடன், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும் பேசவில்லை.

Read More : ”நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட் தான் இது”..!! ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!

English Summary

Development projects of Tamil Nadu have been ignored in this budget.

Chella

Next Post

4 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு..!! 6.3 லட்சம் பேர் உயிரிழப்பு..!! ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Tue Jul 23 , 2024
Around 40 million people around the world were infected with HIV last year. According to the UN, 90 lakh people are living with the disease and are not receiving any treatment. Shocking information has been released.

You May Like