fbpx

“ புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது..” 14 எதிர்க்கட்சிகளின் மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை..

பாஜக தலைமையிலான மத்திய அரசு “மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவில் “95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன. கைதுக்கு முந்தைய வழிகாட்டுதல்கள் மற்றும் கைதுக்கு பிந்தைய வழிகாட்டுதல்களை நாங்கள் கேட்கிறோம்.. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வதற்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது..

2014-க்குப் பிறகு, மத்தியில் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, எதிர்க்கட்சியினர் மீது அதிகமான எண்ணிக்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் பாஜகவில் இணைந்தவுடன் அந்த தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன..” என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், தி.மு.க., ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத கட்சி உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஒப்புக்கொண்டது.. வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

Maha

Next Post

மீண்டும் மீண்டுமா….? விஜய் சங்கீதா விவாகரத்து தொடர்பாக ஏழும் சர்ச்சை டென்ஷனான ரசிகர்கள்…..!

Fri Mar 24 , 2023
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா உள்ளிட்ட இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும், விஜய்க்கு ஏற்கனவே ஒரு நடிகையுடன் காதல் ஏற்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகிறது. விஜய் பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும் இதன் காரணமாக, சங்கீதா விற்கும் விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது என்றும், ஆகவே இருவரும் பிரிவதற்கு முடிவு செய்து விட்டார்கள் என்றும் சினிமா உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் […]

You May Like