2023, செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு (II)-2023 ஆகியவற்றின் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2023, செப்டம்பர் 3 அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை பிரிவுகளில் ஆள் சேர்க்க தேசிய பாதுகாப்பு அகாடமியின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய நேர்காணல் மற்றும் கடற்படை அகாடமி நடத்திய நேர்காணல் ஆகியவற்றின் முடிவுகள் அடிப்படையில் தகுதி பெற்ற 699 விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இது பற்றிய விரிவான தகவல்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் www.joinindianarmy.nic.in அல்லது www.joinindiannavy.gov.in மற்றும் www.careerindianairforce.cdac.in ஆகிய இணையதளங்கள் மூலம் பார்க்கலாம்.
இந்தப் பட்டியல்கள் தயாரிப்பதில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலும் https://www.upsc.gov.in தேர்வு முடிவுகளைக் காணலாம். இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பிறகு வேட்பாளர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.