fbpx

மத்திய அரசின் மாஸ் திட்டம்..!! இனி பணமே இல்லாமல் சிகிச்சை பெறலாம்..!! 24 மணி நேரத்திற்குள் இதை செய்தால் அரசே செலவை ஏற்கும்..!!

உலகளவில் சாலை விபத்து நடக்கும் நாடுகளில் இந்தியா முதன்மையாக உள்ளது. சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகளை குறைக்கவும், விபத்தில் சிக்கியவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு புதிய பிளான் போட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிர் பிழைப்பவர்களுக்கு 7 நாட்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சையை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் மார்ச் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய பேருந்துகள், டிரக்குகளுக்கு ஆடியோ எச்சரிக்கை அமைப்பு பொருத்துவது குறித்தும், இது ஓட்டுநர்கள் தூங்கும்போது அவர்களை எச்சரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய பணமில்லா காப்பீட்டுத் திட்டத்தில் அசாம், சண்டிகர், பஞ்சாப், உத்தரகண்ட், புதுச்சேரி மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் இப்போது செயலில் உள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் இதுவரை 6,840 பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தை பொறுத்தவரை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவரின் கோல்டன் பீரியட் சொல்லப்படும் நேரத்தில் சிகிச்சையை உறுதி செய்வதே மத்திய அரசின் இலக்கு. இதன் மூலம் நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Read More : ”கையில ஒயின் பாட்டில்”..!! ”புருஷன் இல்லாத நேரம் பார்த்து”..!! விஷாலை இப்படி பாக்குறதுல ரொம்ப சந்தோஷம்..!! பரபரப்பை கிளப்பிய சுச்சி..!!

English Summary

The current cashless insurance scheme is currently active in states like Assam, Chandigarh, Punjab, Uttarakhand, Puducherry and Haryana.

Chella

Next Post

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் எடை அதிகரிக்க உடலுறவு காரணமா? - நிபுணர்கள் விளக்கம்

Wed Jan 8 , 2025
Is sex the cause of weight gain in women after marriage?

You May Like