fbpx

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்..

மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஆம்.. ஜூலை மாதத்திற்கான, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் தரவை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 129.2 ஆக இருந்த நிலையில் தற்போது 0.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது. ஜூலையில் இந்த எண்ணிக்கை 129.9 ஆக இருந்தது. இந்த உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரியில் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்க வழி வகுத்துள்ளது. எனவே ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிக்கும்.

இதனிடையே ஜனவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த செப்டம்பர் 28 அன்று மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தற்போதைய நிலவரப்படி அகவிலைப்படி 4% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி தற்போது உள்ள 34 சதவீதத்திற்கு பதிலாக 38 சதவீத டிஏ உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், அடுத்த மாதம் போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையானது மத்திய ஊழியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.. 

7வது ஊதியக் குழுவின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய ஆறு மாதங்களுக்கான AICPI குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இம்முறை, ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்.

மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (AICPI) புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

செல்போனில் மருத்துவர்.. பிரசவம் பார்த்த செவிலியர்கள்..! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!

Fri Sep 2 , 2022
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்க வேண்டிய பெண் மருத்துவர் பணிக்கு வராமல் செல்போனில் சொன்னதை கேட்டு செவிலியர்களும், ஆயம்மாவும் சேர்ந்து வயிற்றை அமுக்கி பிரசவம் பார்த்ததால் ஆண் குழந்தை உயிரிழந்து விட்டதாக பெண் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த சிலம்பி மங்கலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெபராஜ். இவரது மனைவி ஜெசி ஜெனிபர். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அதிகாலை 4 […]
செல்போனில் மருத்துவர்.. பிரசவம் பார்த்த செவிலியர்..! குழந்தையை அமுக்கி கொன்றதாக பரபரப்பு புகார்..!

You May Like