fbpx

திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு-விண்ணப்பம் செய்ய மத்திய அரசு அறிவிப்பு…!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை பெற அக்டோபர் 31-ம் தேதி வரை http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. http://tndce.in இணையதளத்தில் மாதிரி படிவம் மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான தகுதியை தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

நடப்பு 2022-23-ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆதாரில் இருப்பது போல் பதிவிட வேண்டும். மேலும் பெயரிலோ அல்லது முன் எழுத்திலோ ஏதேனும் மாற்றம் இருந்தால், ஆதாருடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் சேர்த்து இணைத்து வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் https://www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று மாநில உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

CSSS திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.10,000 என்று மூன்று வருடங்களுக்கு ரூ.30,000, முதுகலை பயில்வோருக்கு வருடத்திற்கு ரூ.20,000 என்று இரண்டு வருடங்களுக்கு ரூ.40,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான தகுதி போன்றவற்றை htps://www.tndce.இந்த இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

Baskar

Next Post

பஞ்சாபில் ராச்சத கன்டெனர் லாரி கவிழ்ந்துவிபத்து .. அடியில் சிக்கிக் கொண்ட கார்களில் 3 பேர் பலி …..

Tue Sep 13 , 2022
பஞ்சாப் அருகே 18 சக்கரங்கள் கொண்ட ராச்சத கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் அடியில் சிக்கிக் கொண்ட கார்களில் பயணித்த 3 பேர் பறிதாபமாக உயிரிழந்தனர். பஞ்சாப் அருகே சண்டிகர் – பாகவரா தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அங்குள்ள திருப்பத்தில் வேகமாக திரும்பியபோது கன்டெய்னர் லாரி கவிழந்தது. இதனிடையே அடுத்தடுத்து வந்த வாகனங்கள் கன்டெய்னர் லாரி மீது மோதியது. சில கார்கள் கன்டெய்னர் லாரிக்கு அடியில் […]
28 ஆண்டுகளாக

You May Like