fbpx

10, +2 மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு ₹81,100 சம்பளம் வரை மத்திய அரசின் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

தனாப்பூர் கன்டோன்மென்ட் போர்டு 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தனாபூர் கன்டோன்மென்ட் போர்டில் வெவ்வேறு பிரிவுகளில் 8 காலியிடங்கள் இருக்கின்றன. அவற்றை நிரப்புவதற்காக தற்போதைய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணிக்கு 2 காலியிடங்களும், லோயர் டிவிஷன் அசிஸ்டன்ட் பணிக்கு 3 காலியிடங்களும் மாலி, வாட்ச்மேன் மற்றும் பம்ப் ஆப்பரேட்டர் பணிகளுக்கு ஒரு காலியிடமும் இருக்கிறது. இவற்றை நிரப்புவதற்காக தற்போது தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். சானிட்டரி இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் +2வில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பிற்கான ஒரு வருட பட்டய படிப்பை முடித்திருக்க வேண்டும். லோயர் டிவிஷன் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தட்டச்சில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில எழுத்துக்களை நிமிடத்திற்கு 30 எழுத்துக்களும் ஹிந்தி எழுத்துக்களை நிமிடத்திற்கு 25 எழுத்துக்களும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பம்ப் ஆப்பரேட்டர் பணிக்கு ஐடிஐ தொழிற்கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாலி மற்றும் வாட்ச்மேன் பணிகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிகளுக்கு ஊதியமாக ₹ 25500 – 81100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லோயர் டிவிஷன் அசிஸ்டன்ட் பணிகளுக்கு ஊதியமாக ₹ 19900 – 63200/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாலி, வாட்ச் மேன் மற்றும் பம்ப் டெக்னீசியன் பணிகளுக்கு ஊதியமாக ₹ 18000 – 56900/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறனாய்வு தேர்வுகளின் மூலம் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு பொதுப் பிரிவினருக்கு கட்டணமாக 1000 ரூபாயும் எஸ்சிஎஸ்டி மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களுக்கு 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் சேர விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.03.2023. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை அறிய danapur.cantt.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Rupa

Next Post

கவனம்...! மின் இணைப்புடன் ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள்..‌.! 2 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது...?

Tue Feb 28 , 2023
தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் TNEB கணக்கை இணைப்பதில் உதவுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது. ஆதாருடன் இணைக்க கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் பலரும் […]

You May Like