fbpx

மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! பெண் குழந்தைகளுக்கு ரூ.1.80 லட்சம்..!! தீயாய் பரவும் செய்தி..!! உண்மை என்ன..?

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடி கும்பல்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஏழை மக்களுக்கு உதவும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! பெண் குழந்தைகளுக்கு ரூ.1.80 லட்சம்..!! தீயாய் பரவும் செய்தி..!! உண்மை என்ன..?

இந்நிலையில், பெண் குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி காண்யா ஆசீர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.1.80 லட்சம் தரவுள்ளதாக யூடியூப் சேனல் ஒன்று தகவல் கூறியது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இது பற்றி மத்திய அரசின் PIB பேக்ட் செக் அளித்த விளக்கத்தில், அதுபோன்று எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் 22.58% நேரடி வரி வசூல் அதிகரிப்பு...! மத்திய நிதித்துறை தகவல்...!

Mon Mar 13 , 2023
மார்ச் 10ம் தேதி வரையிலான 2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் குறித்த தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன. இந்தியாவில் மார்ச் 10 வரையிலான மொத்த நேரடி வரி வசூல், வசூல் ரூ. 16.68 லட்சம் கோடி இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 22.58% அதிகம். இந்த வசூல் மொத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் 96.67% ஆகும். 2022-23 நிதியாண்டுக்கான நேரடி […]

You May Like