நாட்டில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மக்கள் பயனடையும் திட்டங்களில் ஒன்றுதான் ஆயுஸ்மான் பாரத் திட்டம். இத்திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஆரோக்கிய ஸ்ரீ போன்ற சொந்த சுகாதார திட்டங்களை செயல்படுத்தும் மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் தேவை இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது .
இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 60 கோடி பேர் பயனடைவதாக கூறப்படுகிறது. ஆயுஸ்மான் பாரத் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலங்கள் இந்த அட்டைகளுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. நாட்டில் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் நோக்கம் உறுதி செய்யப்பட்டது. 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.