fbpx

மத்திய அரசின் புதிய மின் கட்டண முறை..!! அப்படியெல்லாம் எதுவும் நடக்காது..!! விளக்கம் கொடுத்த தமிழ்நாடு அரசு..!!

மத்திய அரசு மின்சார விதிகளில் செய்துள்ள திருத்தத்தால், வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நேரத்திற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தி அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் திருத்தம் வீடுகளுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது என்றும், மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்யும் மத்திய அரசின் விதியால், தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி, உச்சநேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் (Smart Meters) பொருத்துவது தொடர்பாக அபராத தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Chella

Next Post

சிம்பு படத்தில் பிரபல நடிகைக்கு நடந்த கொடுமை..!! மூன்றே நாள் தானாம்..!! எல்லாம் முடிஞ்சது..!!

Sun Jun 25 , 2023
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சிம்பு. ஆரம்பகாலங்களில் துருதுருவென கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரது குடும்பங்களிலும் ஒரு உறுப்பினராகவே மாறியவர். ஆனால், சில காலங்களாக சினிமா இவரை ஒதுக்கி வைத்திருந்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கம்பேக் கொடுத்து மீண்டும் தனது ராஜ்ஜியத்தை உருவாக்கினார் சிம்பு. மாநாடு படம் சிம்புவிற்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. யாருமே […]

You May Like