நாடு முழுவதும் பாரத் அரிசி கிலோ ரூ.29 விற்பனை செய்யப்படும் நிலையில் பால் மற்றும் எண்ணெய் பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் மொத்தமாக குறைந்து தற்போது ஒவ்வொரு மாதமும் அதிரடியாக விலையேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஏற்கனவே பொதுமக்களுக்காக மானிய விலையில் பாரத் கோதுமை மாவு மற்றும் பாரத் பருப்பினை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது அரிசி விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் இருந்து பாரத் அரிசியும் கிலோ ரூ.29க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக அரிசி கிலோ ரூ. 40 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படும் நிலையில் பாரத் அரிசி ரூ. 29க்கு வழங்கப்படுவதால் பொது மக்களின் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், தற்போது வரையிலும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் வசதி இன்னும் கொண்டு வரப்படவில்லை. கூடிய விரைவில் ஆன்லைன் மூலமாகவும் பாரத் அரிசியை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அரிசி, பருப்பு மற்றும் கோதுமையை தொடர்ந்து பாரத் பால் மற்றும் எண்ணெய் பொருட்களையும் மத்திய அரசு விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.