fbpx

அடிதூள்.‌..! ஹோலி பண்டிகையை முன்னிட்டு 90 சிறப்பு ரயில்கள்…! மத்திய ரயில்வே அறிவிப்பு…!

இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை முன்னிட்டு 90 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காகவும், மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் ஹோலியின் போது பயண நெரிசலைத் தவிர்க்கவும், தேசிய போக்குவரத்து நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு ரயில் சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது.

வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் விதமாக மத்திய ரயில்வே லோக்மான்ய திலக் டெர்மினஸ் – சமஸ்திபூர் / மட்கான், புனே – டானாபூர் / அஜ்னி / கர்மாலி மற்றும் பன்வெல் – கர்மாலி இடையே கூடுதலாக 34 ஹோலி சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

அதேபோல, கிழக்கு மத்திய ரயில்வே மூலம் மும்பை மற்றும் ஜெய்நகர் இடையே 6 ஹோலி சிறப்புகள் சேர்த்து, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மொத்த ஹோலி சிறப்புகளின் எண்ணிக்கை 90ஆக உள்ளது. மத்திய ரயில்வே சார்பில் 84 ரயில்களும், கிழக்கு மத்திய ரயில்வே சார்பில் 6 ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

Vignesh

Next Post

வரும் காலத்தில் எல்லாம் டிஜிட்டல் தான்...! புதிய ஒப்பந்தம் போட்ட இந்தியா.‌..!

Fri Feb 24 , 2023
டிஜிட்டல் எழுத்தறிவு, திறன் வளர்ச்சியை மேம்படுத்த சிஎஸ்சி அகாடமி-தேசிய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்தியாவில் டிஜிட்டல் எழுத்தறிவு, திறன் வளர்ச்சியை மேம்படுத்த மின்னணு நிர்வாகச் சேவை இந்தியா நிறுவன பொதுச்சேவை மையத்தின் துணை நிறுவனமான சிஎஸ்சி அகாடமி-தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் திறன்மேம்பாடு, அங்கிகாரமையம், மெய்நிகர் அகாடமி, பயிற்சியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம், […]

You May Like