இரண்டு டோஸ் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் செலுத்தப்பட்ட பெரியவர்களுக்கு சீரம் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியான Covovax க்கு சந்தைப்படுத்துதலுக்காண அங்கீகாரம் வழங்குவது குறித்து மத்திய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழு இன்று முடிவெடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங், பெரியவர்களுக்கான ஹீட்டோரோலொஜஸ் பூஸ்டர் டோஸாக Covovax ஐ அனுமதிக்குமாறு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அமெரிக்கா சீனா போன்ற நாடுகளில் நாடுகளில் தொற்றுநோய் நிலைமை அதிகரித்து இந்த பூஸ்டர் டோஸுக்கு அனுமதி வழங்க கோறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தயாரிப்பாளர்களான மாடர்னா மற்றும் நோவாவாக்ஸ் ஆகியவை, காய்ச்சல் மற்றும் கோவிட் தடுப்பூசிகளைதயாரித்து ஒன்றாகச் சோதித்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Novavax இன் தடுப்பூசி நிறுவனம் இந்தியாவில் 1.1 பில்லியன் டோஸ்களை தயாரிக்க புனேவை தளமாகக் கொண்ட தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.