Champions Trophy: இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. அதன்படி, கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. டாம் லாதம் 104 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். வில் யங்-டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது. பிலிப்ஸ் 39 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்கருடன் 61 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அப்ரார் அகமது 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவூத் ஷகில் 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய முகமது ரிஸ்வான் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பகர் சமான் 22 ரன்னில் வெளியேறினார். விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 64 ரன்னில் ஆட்டமிழந்தார். சல்மான் ஆகா அதிரடியாக ஆடி 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த பாபர் அசாம்-சல்மான் ஆகா ஜோடி 58 ரன்கள் சேர்த்தது.
கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 69 ரன்னில் வெளியேறினார். இறுதியில், பாகிஸ்தான் 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர், வில்லியம் ரூர்கி தலா 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி இன்று (பிப்20) தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்துடன் விளையாடுகிறது. வரும் 23-ம் தேதி அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த தொடரில் குரூப் சுற்றில் விளையாடுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: caller ID-களைக் கையாள உதவும் பயன்பாடுகளை அகற்றுங்கள்!. தொலைத்தொடர்புத் துறை (DoT)!.