கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.