fbpx

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு , கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று முதல் வருகிற 8ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baskar

Next Post

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து பலி!!

Sun Jun 4 , 2023
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் ( 40)  என்பவர் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள பிரசிக்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலின் கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றுள்ளார். அப்போது செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு […]

You May Like