தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயிலின் காலம் முடிவடைந்த பின்னரும் கூட வெயிலின் தாக்கம் இன்று வரையில் குறைந்தபாடில்லை.
இந்த வெயிலின் தாக்கம் காரணமாக, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர் சமுதாய முதல் விவசாய பணிகளுக்கு செல்லும் நபர்கள் வரையில் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
ஆனாலும் கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் இந்த வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் இந்த வெயிலை சமாளித்து அவரவர்கள் அன்றாட பணிகளை செய்கிறார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
அந்த வகையில், நாள் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும் இரவு வேலைகளில் ஆகப்போகுது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.
அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் வருகின்ற 29ஆம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இதைத் தவிர சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.