fbpx

அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா அதிகாரப்பூர்வ நீக்கம்..!! குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!!

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையால் அமைச்சர் பணியை சரியாக செய்யவில்லை எனக் கூறி அவரை டிஸ்மிஸ் செய்து என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ திருமுருகனை புதிய அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பரிந்துரை கடிதம் வழங்கினார்.

இதையறிந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கும், முதல்வருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் சாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால், இதுவரை சந்திர பிரியங்கா டிஸ்மிஸ் செய்யப்பட்டாரா? அல்லது ராஜினாமா ஏற்கப்பட்டதா? என்பதை ஆளுநரும், முதல்வரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

வழக்கமாக அமைச்சர் பதவி நீக்கமோ அல்லது இலாகா மாற்றமோ இருந்தால் முதல்வர், ஆளுநருக்கு கடிதம் அளித்து ஒரு சில மணி நேரங்களில் அதற்கான அரசாணை வெளியிடப்படும். ஆனால், 13 நாட்களாகியும் அரசாணை வெளியிடாமல் இருப்பது நாட்டிலேயே இதுவே முதன்முறை என்று கூறப்பட்டது. இது புதுச்சேரி அரசியலில் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் நீக்கத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்து புதுச்சேரி அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா அதிகாரப்பூர்வமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Chella

Next Post

சென்னை வாசிகளே...! மழை பாதிப்பு குறித்து 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க அவசர உதவி எண்..! முழு விவரம்

Sun Oct 22 , 2023
பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு மீட்பு குழுவிலும் ஒரு தலைமைக் காவலர் தலைமையில் 10 காவலர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் மீட்புப் பணிகளுக்காக தலா ஒரு வாகனம் வாகனங்கள், ரப்பர் படகு, ஜாக்கெட்டுகள், கயிறு உள்ளிட்ட என 12 மிதவை மீட்பு […]

You May Like