fbpx

சந்திரயான் – 3..!! என்ஜின்களே வேலை செய்யாவிட்டாலும் தரையிறங்கும்..!! எப்படி தெரியுமா..? இஸ்ரோ விளக்கம்..!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவுக்கான மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் சந்திரயான் – 3 எடுத்த நிலவின் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது.

நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வரும் சந்திரயான் – 3 விண்கலம், அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோ மீட்டராகவும், குறைந்தபட்சமாக 100 கிலோமீட்டராகவும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இதன் உயரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் வரும் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறக்குவதற்கான முயற்சிகள் செய்யப்படுகிறது. இதற்கிடையே, லேண்டரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் என்னவாகும் என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், “விக்ரம் லேண்டரின் முழு வடிவமைப்பும் முடிந்த அளவுக்கு தோல்விகளை சமாளிக்கும் வகையில்தான் உருவாக்கியுள்ளோம். அனைத்து சென்சார்களும் செயலிழந்தாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும். என்ஜின்களே வேலை செய்யாவிட்டாலும் விக்ரம் தரையிறங்கும். நிலவில் விக்ரம் கிடைமட்டமாக சாப்ட் லேண்டிங் செய்வதுதான் இஸ்ரோ குழுமத்தின் முன்னாடி இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். லேண்டர் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்தவுடன் சந்திரனில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக விக்ரம் கிடைமட்டமாக (Horizontal) இறங்கத் தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’தளபதி 68’ டைட்டில் கார்டில் இடம்பெறும் ’சூப்பர் ஸ்டார் விஜய்’..!! வெங்கட் பிரபு சொன்ன குட் நியூஸ்..!! கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்..?

Wed Aug 9 , 2023
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் சென்னை-28, கோவா, மாநாடு, மங்காத்தா போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தனது அடுத்த படத்தை விஜய்யை வைத்து இயக்க உள்ளார். இதன் அப்டேட் சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ”தளபதி 68” படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் – யுவன் காம்போ பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் மீண்டும் […]

You May Like