fbpx

Chandrayaan-3 Memes | ”இது என்னடா கொத்தி போட்ட அம்மிக்கல் மாதிரி இருக்கு”..!! தெறிக்கவிடும் சந்திரயான் – 3 மீம்ஸ்கள்..!!

சந்திரயான் 3 குறித்த பதிவுகள் இணைய உலகை ஆக்கிரமித்துள்ள நிலையில், நெட்டிசன்கள் தங்கள் பாணியில் மீம்ஸ்களாக தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அனைத்து சமூக வலைதளங்களிலும் சந்திரயான் – 3 குறித்த பதிவுகளே ஆக்கிரமித்துள்ளன. சும்மமாவே, புகுந்து விளையாடும் நெட்டிசன்கள், இஸ்ரோ செய்திருக்கும் வரலாற்று சாதனையை மட்டுமே விட்டு விடுவார்களா என்ன..? தங்களுக்கு உரிய பாணியில் சந்திரயான் விண்கலம் குறித்து ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.

வடிவேலுவின் சூனா பானா காமெடி காட்சியை வைத்து வெளியிட்டிருக்கும் மீம்சில், ”சந்திரயான் 3 நல்லபடியா இறக்கியாச்சு.. கிளம்பு போ..போ.. ஜெய்ஹிந்த் என சொல்லிவிட்டு எல்லாருக்கும் மிட்டாய் கொடு” என மீம்ஸ் போட்டுள்ளனர். அடுத்ததாக ”பெண்ணே நிலவு முகம் என்று யாராவது உன்னை வர்ணித்தால் மயங்கிவிடாதே.. சந்திரயான் 3 எடுத்த நிலவின் ‘க்ளோசப்’ புகைப்படத்தை பார்” மீம்ஸ் போட்டுள்ளனர். மேலும், “நிலவை கண்டதில்லை.. உன் முகத்தை நிலவாக காண்கிறேன் அன்பே என்றும் டேய்.. ரொம்ப உருட்டாதடா.. நிலவு போட்டாவ நேத்து தான் டிவி நியூசில் பார்த்தேன்.. கொத்தி போட்ட அம்மிக்கல் மாதிரி இருக்குது.. அப்படியா இருக்கு என் முகம்” என்ற மீம்சும் வைரலாகி வருகிறது.

மற்றொரு மீம்ஸ் ஒன்றில், ”ஆடி முடிஞ்சு ஆவணியில் எல்லோரையும் சந்திரயான் டாப்ல கொண்டு வந்துடுவான்” என்று பதிவிட்டுள்ளனர். மற்றொன்றில், சந்திரயான் 1, 2, 3 ஆகிய மூன்று விண்கலன்களிலுமே தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகித்ததை சுட்டிக்காட்டியும் நெட்டிசன்கள் மீம்ஸ் ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர்.

Chella

Next Post

சிறுவன் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட பொறியாளர்….! வெளியான பகீர் காரணம்….!

Thu Aug 24 , 2023
வாய் பேச முடியாத மகனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த தந்தை, மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் குடிநீரில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவராமன். இவர் பெங்களூரில் இருக்கின்ற விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு, வசந்தா […]

You May Like