fbpx

சிலிண்டர் விலையில் மாற்றமா..? எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்..!! நாளை வெளியாகும் அறிவிப்பு..!!

நவம்பர் மாதத்தில், சமையல் சிலிண்டரின் விலை பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், நாளைய தினம் கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலைமட்டும் தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. கேஸ் விலையோ, மாதத்திற்கு ஒன்று அல்லது 2 முறை மாற்றியமைக்கப்படுகிறது.

அந்தவகையில், இஸ்ரேல் விவகாரம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதனால் சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிருப்தியிலும் கவலையிலும் உள்ளனர். கடந்த செப்டம்பரில், 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 203 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. அதனால், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதுபோலவே, இந்த நவம்பர் 1ஆம் தேதி, கேஸ் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. செப்டம்பரில் நிலவிய, அதே 918.50 ரூபாய்தான், நவம்பரிலும் தொடர்ந்தது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு, சிலிண்டருக்கு 57 ரூபாய் குறைந்து 1,942 ரூபாய்க்கு விலை செய்யப்பட்டது.

இந்நிலையில், நாளை டிசம்பர் மாதம் துவங்க போகிறது. எனவே, மாத தொடக்கமான நாளை, சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வீட்டு சிலிண்டரில் மாற்றம் இருக்க போவதில்லை என்றும், வணிக சிலிண்டர் விலை மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சமையல் சிலிண்டருக்கான மானியம் விரைவில் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Chella

Next Post

மூன்றாவது முறை ஆட்சி அமைக்க போராடும் சந்திரசேகர ராவ்…! தெலுங்கானா சட்டசபை தேர்தலூக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!

Thu Nov 30 , 2023
தெலுங்கானா ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து வந்ததில் இருந்து சந்திரசேகா்ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.) கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது சந்திரசேகா்ராவ் தலைமையிலான பி.ஆா்.எஸ். கட்சி. தெலுங்கானாவில்ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2018 இல், BRS (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) 119 இடங்களில் 88 இடங்களை […]

You May Like