fbpx

4முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுத் தேதிகளில் மாற்றம்..!

4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தின் படி 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப். 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கேற்ப 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி நடக்கவிருந்த அறிவியல் தேர்வுகள் ஏப்ரல் 22ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kathir

Next Post

DMK Files: கலாநிதி வீராசாமி குடும்பத்தின் சொத்து மதிப்பு, ரூ.2,923 கோடி...! அண்ணாமலை அதிரடி

Sat Mar 30 , 2024
திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று, வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் பால் கனகராஜ் அவர்களை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் அண்ணாமலை; சிங்காரச் சென்னை என்று கூறி, இத்தனை ஆண்டுகளில் சென்னையை மூழ்கும் சென்னையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். வடசென்னையில், அண்ணன் பால் கனகராஜ் […]

You May Like