fbpx

விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் மாற்றம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்தந்த மாநில கலாச்சாரங்களுக்கு ஏற்ப அவரவர் விநாயகர் சிலைக்கு படையலிட்டு வழிபடுவார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை வைத்து அதற்கு கொழுகட்டை, எள்ளு உருண்டை, சுண்டல் ஆகியவற்றை வைத்து படைப்பது வழக்கம். பின்னர் 3-வது நாளில் விநாயகரை கரைப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கும் இடங்களில் கரைத்துவிடுவார்கள்.

இந்நிலையில், எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் திதி, நட்சத்திரம் உள்ளிட்டவற்றை வைத்து கணிக்கப்படுகிறது. திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்கம் என இரு வகைகள் உண்டு. அந்த வகையில், தமிழ்நாட்டில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்.18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் செப்.19ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி என திருக்கணித பஞ்சாங்கம் தெரிவிக்கிறது.

இதற்கிடையே, விநாயகர் சதுர்த்தி செப்.17 ஆம் தேதி என குறிப்பிட்ட தமிழக அரசு, அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும் போதிலும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இப்படி 3 விதமான தேதிகளால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், ஜோதிடர்களோ விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தான். பொதுவாக அமாவாசையில் இருந்து 4-வது நாள் சதுர்த்தி திதி வரும். அதன் அடிப்படையில் செப்.18ஆம் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். செப்டம்பர் 18ஆம் தேதி காலை 11.28 மணிக்கு சதுர்த்தி தொடங்கி அடுத்த நாள் 19ஆம் தேதி 11.44 மணிக்கு முடிவடைகிறது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதியில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே செப்.17ஆம் தேதி விடுமுறை என்ற அரசாணையை நீக்கிவிட்டு செப்டம்பர் 18 ஆம் தேதி விடுமுறை என்ற புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் குழப்பம் தீர்ந்ததாக பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Chella

Next Post

”இந்த அரண்மனைக்கு நான் தான் ராஜா”..!! பூமிக்கடியில் 12 வருடங்கள்..!! மசூதி, 11 அறைகளை செதுக்கிய விவசாயி..!!

Thu Aug 31 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் இர்பான் என்பவர் வசித்து வருகிறார். அவர் ஒரு நிலத்தடியில் இரண்டு மாடி அரண்மனையை கட்டியுள்ளார். இந்த கட்டிடக்கலை அதிசயத்தை உருவாக்க அவருக்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர் ஒரு மசூதி, 11 அறைகள், படிக்கட்டுகள், ஒரு கேலரி மற்றும் ஒரு சித்திர அறையையும் வடிவமைத்துள்ளார். இந்த அரண்மனையை கடந்த 2011ஆம் ஆண்டு கட்டத் தொடங்கியதாகவும், அதை மேலும் விரிவுபடுத்த ஆர்வமாக இருப்பதாகவும் இர்ஃபான் கூறியுள்ளார். […]

You May Like