வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம், 2023 மற்றும் அதன் விதிகளை அரசிதழில் மத்திய அரசு அறிவித்துள்ளது, இதன் விளைவாக இந்த சட்டம் 2024 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இனிமேல், பருவ இதழ்களின் பதிவு பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம் , 2023 மற்றும் பத்திரிகை மற்றும் பருவ இதழ்களின் பதிவு விதிகளால் நிர்வகிக்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி, இந்திய பத்திரிகை பதிவாளர் அலுவலகம் – இந்திய செய்தித்தாள்களின் முன்னாள் பதிவாளர் புதிய சட்டத்தின்படி செயல்படும்.டிஜிட்டல் இந்தியாவின் நெறிமுறைகளுக்கு ஏற்ப, நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் இதர பருவ இதழ்களை பதிவு செய்வதற்கான இணையதள வசதியை புதிய சட்டம் வழங்குகிறது.
பதிப்பாளர்களுக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும் பல்வேறு கட்டங்களில் பல்வேறு படிகள் மற்றும் ஒப்புதல்களை உள்ளடக்கிய சிக்கலான நடைமுறைகளை புதிய முறை மாற்றியமைக்கிறது.முன்னதாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், புதிய சட்டத்தின்படி விண்ணப்பங்களைப் பெறுவதற்காக தலைமை பத்திரிகை பதிவாளர் பிரஸ் சேவா இணையதளத்தை (presssewa.prgi.gov.in) தொடங்கினார்.