fbpx

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்..!! உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் இன்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் முக.ஸ்டாலின், ”அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்கனவே தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டார். அதுவே வெள்ளை அறிக்கைதான். வெளிநாட்டு முதலீடுகள் ஏமாற்றும் திட்டங்கள் அல்ல. அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது எனக்குத் தெரியாதா!’ என்றார்.

முன்னதாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் ஸ்டாலின் 17 நாட்களில் 25 நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 11,516 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்தான் முதல்வர் அது தொடர்பான கேள்விக்கு இவ்வாறாக பதில் அளித்துள்ளார். அதேபோல், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Read More : கேரளாவில் இருந்து பெண்ணை வரவழைத்து அடிக்கடி உல்லாசம்..!! இம்முறை மேட்டரே வேற..!! அரை நிர்வாணமாக ஓடிய அதிமுக நிர்வாகி..!!

English Summary

There will be no disappointment with the change in the cabinet,” said Chief Minister Md. Stalin.

Chella

Next Post

'விசிக இல்லையென்றால் திமுக கிடையாது' - ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு VCK எம்.பி ரவிக்குமார் கண்டனம்..!!

Tue Sep 24 , 2024
Ravikumar condemns Aadhav Arjuna's comment that DMK cannot win without VCK alliance

You May Like