fbpx

உங்க ஆதாரில் புதிய மொபைல் நம்பரை எப்படி இணைப்பது…? வெறும் 2 நிமிடம் போதும்….! முழு விவரம்….

உங்கள் ஆதாரில் புதிய மொபைல் நம்பரை எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.

உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைப்பது என்பது கட்டாயம். அதை நீங்கள் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ எளிதில் செய்து விடலாம். உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைத்தால், பல்வேறு அரசு சேவைகளை அணுகுவது மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதுப்பிப்புகள் மற்றும் அறிவிப்புகளைப் பெறுவது எளிதாக இருக்கும். உங்கள் புதிய மொபைல் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

எப்படி இணைப்பது…?

முதலில் நீங UIDAI இணையதளத்தில் ask.uidai.gov.in க்குச் செல்லவும்.

அடுத்தடுத்து நீங்கள் வைத்திருக்கும் போன் நம்பரை பயன்படுத்தி உள்நுழையவும்.

பின்னர் ஆன்லைன் ஆதார் சர்விஸ் செக்ஷனிலிருந்து இருந்து மொபைல் நம்பர் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

தற்பொழுது அதில் கேட்கப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் கேப்ட்சா குறியீட்டை சரியாக நிரப்பவும்.

இப்பொது உங்கள் புதிய போன் நம்பருக்கு OTP வரும், அதனை அந்த தளத்தில் உள்ளிட்ட பிறகு ‘Save and Proceed ‘ என்பதைக் கிளிக் செய்யவும். இறுதியில் உங்கள் செயல் முடிந்துவிடும்.

Vignesh

Next Post

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...! SSC தேர்வுக்கு ஏப்ரல் 1, 2023 முதல் விண்ணப்பிக்கலாம்....! முழு விவரம் இதோ...!

Sun Jan 15 , 2023
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான பதிவு செயல்முறையை ஏப்ரல் 1, 2023 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 1, 2023 ஆகும். இந்த ஆண்டு, SSC CGL 2023 தேர்வை ஜூன் மற்றும் ஜூலை 2023 இல் ஆணையம் நடத்தும் என்ற தகவலும் […]

You May Like