fbpx

காலாண்டு விடுமுறையில் குழப்பம்..!! பள்ளிகள் மீண்டும் திறப்பு..!! புதிய அறிவிப்பு வெளியீடு..!!

தமிழக பள்ளிகளில் காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்பது குறித்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் செப்.30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், தேர்வுகள் முடிந்து கண்டிப்பாக காலாண்டு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் சிறப்பு வகுப்புகளை அனுமதி இன்றி நடத்தக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

காலாண்டு விடுமுறையில் குழப்பம்..!! பள்ளிகள் மீண்டும் திறப்பு..!! புதிய அறிவிப்பு வெளியீடு..!!

அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அக். 1 முதல் 5ஆம் தேதி வரை 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசு நடத்தும் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஆசிரியர்கள் அக்.10 முதல் 12ஆம் தேதி வரை கலந்து கொள்ள இருப்பதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 1-5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதி தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

காலாண்டு விடுமுறையில் குழப்பம்..!! பள்ளிகள் மீண்டும் திறப்பு..!! புதிய அறிவிப்பு வெளியீடு..!!

ஆனால், தமிழகத்தில் தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் திறப்பு குறித்து தற்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் அனைத்தும் அக்.10ஆம் தேதி திறக்கப்பட வேண்டும் என்று திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால். வெளியூர் சென்ற மாணவர்கள் மீண்டும் அவசர கதியில் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், சிபிஎஸ்இ பள்ளிகள் முன்னதாக அக். 6ஆம் தேதியான இன்று பள்ளிகள் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தனியார் பள்ளிகள் அக்டோபர் 10ஆம் தான் திறக்கப்படும் என்று வெளியான அரசின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், அரசின் அறிவிப்பு தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தான் பொருந்தும் என்றும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறி திட்டமிட்டபடி தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க… இன்றே கடைசி நாள்..!! மேலும் கால அவகாசம் கிடையாது..!! உடனே இதை செய்யுங்க..!!

Chella

Next Post

ஆபத்து..!! சளி, இருமலுக்கு இந்த மருந்தைதான் கொடுக்குறீங்களா..? 66 குழந்தைகள் மரணம்..!!

Thu Oct 6 , 2022
இந்திய மருந்து நிறுவனத்தின் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்துவிட்ட நிலையில், அம்மருந்தை உபயோகத்தில் இருந்து விலக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இருமல் மற்றும் சளி மருந்துகளை தயாரித்து வரும் மெய்டன் பாராசூட்டிகள் நிறுவனத்தின் மருந்து சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய நிறுவனம் ஆகும். இந்நிலையில், ஆப்பிரிக்க நாட்டுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் சளி […]
66 குழந்தைகளை காவு வாங்கிய மருந்து..!! ’இந்தியாவில் உற்பத்தி மட்டுமே... விற்பனை இல்லை’..!! மத்திய அரசு

You May Like