fbpx

விடுதலையாகிறார் சவுக்கு சங்கர்..!! 4 வழக்குகளிலும் ஜாமீன்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த 4 வழக்குகளிலும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது உயர்நீதிமன்றம் கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

விடுதலையாகிறார் சவுக்கு சங்கர்..!! 4 வழக்குகளிலும் ஜாமீன்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற கிளை விதித்த சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்வரை வழக்கு தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று சவுக்கு சங்கருக்கு நிபந்தனை விதித்துள்ளது. இதையடுத்து, சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று கருதப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள 4 வழக்குகள் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

விடுதலையாகிறார் சவுக்கு சங்கர்..!! 4 வழக்குகளிலும் ஜாமீன்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

இந்த வழக்கு கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டது. இந்த 4 வழக்குகளின் கீழ் கடந்த 11ஆம் தேதி சவுக்கு சங்கரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது நிபந்தனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

உயிரிழந்த பிரியாவின் குடும்பத்தினருக்கு ’அரசு வீடு’ வழங்கும் ஆணையை முதல்வர் வழங்கினார்!!

Thu Nov 17 , 2022
தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை உயிரிழந்ததை அடுத்து பிரியாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறிவிட்டு அரசு வீடு வழங்கும் ஆணையை வழங்கினார். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் ப்ரியாவின் குடும்பத்தினர் வீடு இன்றி கஷ்டத்தில் இருப்பது […]

You May Like